மிதுனம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

மிதுனம் சுபகிருது வருட பலன்கள்

புத்திக் கூர்மையுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களுக்கு கடினமான வருடமாகவே இருக்கும். உடல் நலன் மற்றும் மன நலனில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் சோம்பேறித்தனமாக செயல்படுவீர்கள்.

அஷ்டம சனி நடப்பதால் பொருளாதார ரீதியாக பெரும் அடியினைச் சந்திப்பீர்கள். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதிலும் சரி, எடுத்த வேலையினை முடிப்பதிலும் பல இடையூறுகள் ஏற்படும்.

மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும், மேலும் தைரியமான நபர்களின் தன்னம்பிக்கையும் சில நேரங்களில் உடைந்து போக வாய்ப்புண்டு.

சகோதர, சகோதரிகள் இடையூறு கொடுப்பார்கள், இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். பெற்றோர் உடல் நலனில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நிலம், மனை எதையும் விற்கக் கூடாது. புதிதாகவும் வீடு, மனையில் செலவிடுவதைத் தவிர்க்கவும்.

உறவினர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு, அதனால் பேசும் வார்த்தைகளில் கூடும் கவனம் செலுத்த வேண்டும். வண்டி, வாகனம் மட்டுமல்லாது மருத்துவ ரீதியாக விரயச் செலவுகளை சந்திப்பீர்கள். குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவது நல்லது.

குழந்தைகளின் கல்வி, உடல் நலனில் மந்தநிலை இருக்கும். பொருளாதார நிலையினை சமாளிக்க கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். திருமண சார்ந்த காரியங்களை ஒத்தி வைப்பது நல்லது, கணவன்- மனைவி உறவில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கி உங்களுக்கான பங்கினை பெறுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.