மிதுனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள மிதுனம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் சமயோஜித புத்தியை பயன்படுத்தி தடைபட்ட காரியங்களை முடித்து காட்டும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் புதன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது வருகின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சூரியனோடு புதன் இணைந்து ‘புத ஆதித்ய’ யோகம் உருவாகுவதால் தொட்டது துலங்கும். விலையுர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பிரிந்த உடன்பிறப்புகள் மீண்டும் இணைவார்கள்.

உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டின் அதிபதியான சூரியன் சொந்த வீட்டில் சிம்மத்தில் இருக்கும் பொழுது தடுமாற்றங்கள், தடைகள் விலகும். இதுவரை இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும். தன்னம்பிக்கை பிறக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

உங்கள் ராசிநாதன் புதன் செப்டம்பர் 3-ம் தேதி அஸ்தமனம் ஆகும் பொழுது எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் சிறு சிறு தொல்லைகள் ஏற்படக்கூடும். செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசிக்கு சஞ்சரிப்பதால் தாரளமாக பணவரவு உண்டாகும். வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வக்ர சனி நிவர்த்தியாகி கண்டச்சனியாக தொடர்வதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். கண்டச்சனி வலுப்பெறுவதால் யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சனி குருவின் வீட்டில் இருந்தாலும், சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் நன்மைகள் ஏற்பட சற்று தாமதம் ஏற்படக்கூடும். சிலருக்கு நீண்ட தூர இடமாற்றம் உண்டாகும். வரவேண்டிய தொகை வருவதற்கு தாமதம் ஏற்படலாம்.

சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் குருவுடன் இணைந்து இருப்பதால் மங்கள நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறக்கூடும். செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். வரவு எவ்வளவு வந்தாலும் மறுநிமிடமே  செலவாகிவிடும். ராகு-கேது ஆதிக்கம் ஒரு புறம் இருந்தாலும், குரு பார்வை இருப்பதால் உங்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை பக்குவமாக அணுகி வெற்றி பெரும் வித்தைகளை கற்று கொள்வீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment