மிதுனம் ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!

மிதுனம் ராசியினருக்கு பங்குனி மாதங்கள் முழுவதும் கிரகங்கள் சாதகமாக இருப்பதால் நன்மைகள் அதிக அளவில் நடைபெறப் போகிறது. மார்ச் 26-ம் தேதி சுக்ரன் பதினோராம் இடத்திற்கு மீனத்தில் வரப் போவதால் சிறப்பான பலன்களைக் கொடுக்கப்போகிறது. மேலும் சூரியன், புதன் பத்தாம் வீட்டில் இணைந்து உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும். பத்தாம் வீட்டில் இருக்கும் சூரியனால் தடைபட்ட காரியங்கள் நடைபெறும் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

ஏப்ரல் 10-ம் தேதி பிறகு குரு வக்கிரம் பெற்று மீண்டும் துலாம் ராசிக்கு வருவதால் அவரும் நற்பலன்களை கொடுப்பார். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

மிதுனம் ராசியினருக்கு தேவைகள் பூர்த்தியாகும் மாதமாக இருக்கிறது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். உற்சாகமாக காணப்படுவீர்கள். இதுவரை பல பரிகாரங்கள் செய்து விட்டேன், போகாத கோவில்கள் இல்லை என்று வருத்தம் அடைந்தவர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது. குழந்தை பாக்கியம் கிட்டும். கணவன் மனைவி உறவு மேம்படும்.

மார்ச் 24, 25-ம் தேதி சகோதர வகையில் ஆதாயம் கிட்டும். மார்ச் 26-க்கு பிறகு பணவரவு இருக்கும். எதிர்ப்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்கும். ஒரு சிலர் உங்களை தவறான பாதையில் செல்ல தூண்டலாம். எதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள். இந்த மாதம் சுக்ரன், புதன் சாதகமாக இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

ராகு கேது உங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்துச் செல்லுங்கள். ஒரு சிலருக்கு புதிய வேலை கிடைக்கும் அல்லது செய்யும் வேலை விட்டு வேறு வேலை அமையக் கூடும். எதிர்ப்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடம் மாற்றம் உண்டாகும் . வியாபாரிகள் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். எலக்ட்ரானிக்ஸ், கட்டிடம், உணவு போன்ற தொழில் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். ஒரு சிலர் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். மிதுனம் ராசி பெண்களுக்கு கணவர் வீட்டாரின் ஆதரவு கிட்டும்.

பரிகாரம்:

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்து வாருங்கள். திங்கட்கிழமையில் சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் நன்மைகள் கிடைக்கும். அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு சென்று பெருமாளை தரிசித்து வந்தால் இனம் புரியாத பயம் நீங்கி மனம் தெளிவு பெரும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment