மிதுனம் பங்குனி மாத ராசி பலன் 2023!

மிதுன ராசியினைப் பொறுத்தவரை செலவினங்கள் குறைந்து லாபம் ஏற்படும் மாதமாக இருக்கும். ராசிநாதன் புதன் தசம மற்றும் லாப ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

தசம ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுப்பார். தன்னம்பிக்கை மற்றும் சுகங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் சரியாகி முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல் நலனில் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தொழில்ரீதியாக பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். வெளிநாடு செல்ல நீங்கள் பல ஆண்டுகளாக முயற்சித்தநிலையில் உங்களின் கனவு ஈடேறும்.

வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். இரண்டாம் இடத்தில் குரு பகவானின் பார்வை இருப்பதால் பணப் பற்றாக்குறை இருக்காது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும்.

பூர்விகச் சொத்துகள் ரீதியாக விரக்தி மனநிலையுடன் நீங்கள் விட்டுக் கொடுத்துவிடுவீர்கள். வியாபாரத்தைப் பொறுத்தமட்டில் ஏற்றம் கொண்டதாக இருக்கும்; ஆனால் வரவுக்கேற்ற செலவினங்கள் ஏற்படும்.

முடிந்தளவு கையில் பணம் தங்குகையில் கடன்களை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை பிள்ளைகளின் சம்மதத்திற்காக காத்திருப்பீர்கள். உடன் பிறப்புகளுடன் மனக் கசப்புகள் ஏற்படும்.

குடும்பத்தில் கணவன் – மனைவி மனம்விட்டுப் பேசினால் பல பெரிய பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். குடும்பத்துடன் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews