மிதுனம் மார்ச் மாத ராசி பலன் 2023!

மிதுன ராசியினைப் பொறுத்தவரை குருவும் – சுக்கிரனும் 10 ஆம் இடத்தில் இருந்து அம்ச யோகம், ராஜ யோகத்தினைக் கொடுப்பர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்க்காத நன்மை நடக்கப் பெறும்.

புதன்- சூர்யன் இடப் பெயர்ச்சி செய்து 10 ஆம் இடத்தில் உள்ள சுக்கிரனுடன் இணைகின்றது. வியாபார ரீதியாக எடுத்துக் கொண்டால் இதுவரை ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீண்டு பணப் புழக்கம் அதிகரிக்கும் கால கட்டமாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை திருமணம் தள்ளிப் போய் இருத்தல், எதிர்பார்த்த வரன் அமையாமை என பல மோசமான நிலைகளைச் சந்தித்து இருப்பீர்கள்.

ஆனால் இனி எதிர்பாராத வரன்கள் அமையும், நிச்சயதார்த்தம், திருமணம் என சுப காரியங்கள் விறுவிறுவென நடந்தேறும். காதலர்களைப் பொறுத்தவரை பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்வர், குடும்பத்தில் விவாகரத்து வரை செல்லவிருந்த கணவன்- மனைவி இருவரும் புரிந்துகொண்டு சமரசத்துக்கு வருவர்.

குழந்தைகளால் பெருமை கிடைக்கும். மேலும் மாணவர்கள் கல்விரீதியாக மிகவும் கவனத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் இருப்பர். மனதில் உள்ள எதிர்மறையான விஷயங்கள் களைந்து தன்னம்பிக்கையுடனும், துணிச்சலோடும் எந்தவொரு விஷயத்தையும் செய்து முடிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மன நிம்மதியுடன் காணப்படுவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.