மிதுனம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

அஷ்டமச் சனியால் படாதபாடு பட்டு வந்த உங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

தடைகள், தாமதங்கள், பிரச்சினைகள் என அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகின்றது. நிர்பந்திக்கப்பட்ட பல மோசமான சூழ்நிலைகளில் இருந்து விடுபடுவீர்கள். 10 ஆம் இடத்தில் குரு பகவான், 7 ஆம் இடத்தில் புதன் பகவான், 12 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தயக்கத்துடன் நீங்கள் தள்ளிப்போட்ட காரியங்களை துணிவோடு எதிர்கொள்வீர்கள்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தயக்கம், சிறு சிறு தடங்கல்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை இதுவரை இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

மனதளவில் இருந்த சங்கடங்கள் தீர்ந்து மன நிம்மதி பெறுவீர்கள். மாணவர்கள் கல்விரீதியாக பெரிய அளவில் குழப்பம் மிகுந்து காணப்பட்டீர்கள். ஆனால் தற்போது மிகவும் தெளிவுடன் முயற்சியினை எடுப்பீர்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மூன்றாம் நபர்களின் தலையீட்டால் பிரச்சினைகள், மனக் கசப்புகள் ஏற்படும்.

தொழில் கூட்டாளர்கள், நண்பர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடந்த காலங்களில் இருந்த ஏக்கங்கள் அனைத்தும் ஈடேறும். சனிப் பெயர்ச்சியால் நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நடக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.