மிதுனம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

புதிய தேடுதலைப் பூர்த்தி செய்யும் வகையில் வாய்ப்புகள் உங்களுக்காகவே உருவாகும், 10 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். 11 ஆம் தேதிக்குப் பின் சுக்கிரன் குருவுடன் இணைகிறார், அதன்பின் சுக்கிரன் உச்சம் அடைகிறார்.

வேலைவாய்ப்புரீதியாக இருந்த தடைகள், போதிய வருமானமின்மை, சரியான வேலைவாய்ப்பின்மை என அனைத்தும் பனி போல் விலகி புது வாய்ப்புகள் அமையும்.

நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைக்கும் மாதமாக இருக்கும். புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்கிறார். சுக்கிரன்- சனி கூட்டணி நல்ல யோகத்தினைக் கொடுக்கும். செவ்வாய் பகவான் 12 ஆம் இடத்தில் உள்ளார்.

வெளிநாடு செல்ல நினைப்போருக்கு இருந்த தடைகள் விலகும்.  திருமண காரியங்களைப் பொறுத்தவரை செவ்வாய் பகவான் சிறு எதிர்ப்புகளை ஏற்படுத்துவார்.

மாணவர்களைப் பொறுத்தவரை பலவீனமாக உணர்ந்த விஷயங்கள் அனைத்தும் பலமாக மாறும். புதிதாக எடுக்கும் முடிவுகளில் நேர்மறையான பலன்கள் கிடைக்கப் பெறும்.

பொறுப்புகளைச் சுமந்து சோர்ந்து போய் இருந்தீர்கள், இனி உங்கள் வாழ்கையில் இருந்த சிக்கல்கள், மன அழுத்தங்கள் அனைத்தும் விலகும் மாதமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை சிறு சிறு உடல் தொந்தரவுகள்தான் இருக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் சரியாகும். நினைத்ததை செய்து முடிக்க தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews