மிதுனம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

இராசிநாதன் புதன் 4 ஆம் இடத்தில் உச்ச பலத்துடன் உள்ளார். தொழில்ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள் அனைத்தும் கிடைக்கப் பெறும். தொட்டது துலங்கும் காலமாக இருக்கும்.

இராசியில் செவ்வாய் இருப்பதால் உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்படும். இராசிக்கு 5 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன் மற்றும் கேது உள்ளது.

சில சமயங்களில் தைரியம் இழந்தவராகக் காணப்படுவீர்கள்; ஆனால் தைரியத்துடன் செயல்படுதல் வேண்டும். மனக் குழப்பம் நிறைந்தும் காணப்படுவீர்கள்.

இராசிக்கு 8 ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார், தந்தைக்கும்- உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தந்தையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை.

இராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார், தொழில்துறை சார்ந்த வளர்ச்சி பெரிதளவில் இருக்கும்.  வேலைவாய்ப்பு ரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் என நினைத்த காரியங்கள் கைகூடும்.

லாபஸ்தானத்தில் ராகு பகவான் இருப்பதால் தாத்தா- பாட்டி ஆகியோரால் அனுகூலங்கள் ஏற்படும். குழந்தைகள் குறித்து அதிக கவலை கொண்டு இருப்பீர்கள்; ஆனால் குழந்தைகள் குறித்த உங்கள் எண்ணம் விரைவில் ஈடேறும்.

விநாயகர் கோவிலுக்குச் சென்று வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews