மிதுனம் ஆவணி மாத ராசி பலன் 2022!

உத்தியோகம், தொழில், வியாபாரம் என அனைத்திலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும் மாதமாக இருக்கும். சூரியனின் ஆதிக்கம் மிகப் பெரிய பலத்தினைக் கொடுக்கும், தன்னம்பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும்.

தொழிலில் இருந்த பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து காணப்படும். மேலும் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு, பணி இடமாற்றம் என நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பெரியோர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்தல் நல்லது. பெற்றோர் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. எதிரிகளுடன் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

செவ்வாய் 12 இல் மறைவதால் உடல் பாதிப்புகள் இருந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வழிவகுக்காது. உள்ளூர்ப் பயணங்கள், வெளியூர்ப் பயணங்கள், கடல் கடந்த பயணங்கள் மிகச் சிறந்த அனுகூலம் நிறைந்த ஒன்றாக காணப்படும்.

பழைய கடன்களைத் தீர்த்து முடிப்பீர்கள். திருமண காரியங்களை இந்த ஒரு மாதத்திற்குத் தள்ளிப் போடுதல் வேண்டும். எந்தவொரு முடிவினையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துச் செயல்படுதல் வேண்டும்.

குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்படுவார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.