Connect with us

மிதுனம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

Rasipalan

மிதுனம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள மிதுனம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் மன குழப்பங்களும், கசப்பான நிகழ்வுகளில் இருந்து விடுபடும் மாதமாக இருக்கப் போகின்றது. இந்த மாதம் குரு வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியை பார்ப்பாதல் வாய்ப்புகள் தேடி வரக்கூடும். ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் மற்றும் மூன்றாம் இடத்து சுக்கிரனால் திருமண பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். இரு கிரகங்களும் பொருளாதார வளத்தை மேம்படுத்துவர். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

உங்கள் ராசிநாதன் புதன் சூரியனோடு, ராகுவுடன் இணைந்து கடகத்தில் இருப்பதால் தாராளமாக பணவரவு வரக்கூடும். மனக்கசப்புகள் நீங்கும். உங்களை புரிந்துக் கொள்ளாமல் இருந்த உறவினர்கள் தற்போது உங்களை நாடி வருவார்கள். அலுவலகத்தில் பல வித இன்னல்களை சந்தித்து வந்தீர்களே, இனி நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராகு 2-ம் இடத்திலும் கேது பகவான் 8-ம் இடத்தில்  தொடர்வதால் காரியங்கள் தாமதம் ஏற்பட்ட பிறகே முடிவுபெறும்.

உங்கள் ராசிக்கு கண்டச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. குருவின் பார்வை 9,11 இடத்தின் மீது விழுவதால் உங்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாய்வழி ஆதரவு கிட்டும். வக்ர நிவர்த்தியாகும் குரு பார்வை ராசியில் விழுவதால் இல்லத்தில் முன்னேற்றம் கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கூடிய புதிய வேலை, இடமாற்றம் எல்லாம் நல்லபடியாக முடிவடையும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top