Connect with us

‘பொன்னியின் செல்வன்’ போஸ்டரில் தவறா? என்ன நடந்தது!

pshome 1654675823 2

பொழுதுபோக்கு

‘பொன்னியின் செல்வன்’ போஸ்டரில் தவறா? என்ன நடந்தது!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6:00 மணிக்கு வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.

இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளமே பணியாற்றியுள்ளனர்.

16570164923078

பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பழுவூர் ராணி நந்தினி,குந்தவை ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றம் கொண்ட போஸ்டர் வெளியான நிலையில் நேற்று ராஜ ராஜ சோழன் என்கிற அருள் மொழி வர்மனின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியானது .

கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாக்கியது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இந்த அறிமுகப் போஸ்டர்களில் சில எழுத்துப் பிழைகள் உள்ளதால் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.Copy of feature image 97 16572708173x2 1

முதலில் வெளியான விக்ரம் போஸ்டரில் ‘ஆதித்த கரிகாலன்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதித்ய கரிகாலன்’ என இருந்தது. இன்று வெளியான ஜெயம் ரவி போஸ்டரில் ‘அருள்மொழி வர்மன்’ என்பதற்குப் பதிலாக ‘அருண்மொழி வர்மன்’ என இருக்கிறது.

மணிரத்னத்திடம் தமிழ் தெரிந்த உதவி இயக்குனர்கள் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த போஸ்டர்கள். மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் இயக்கும் ஒரு படத்தில் இப்படி ஒரு தவறு நிகழலாமா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

முடக்கப்பட்ட சமந்தாவின் வலைத்தள பக்கங்கள்! காரணம் தெரியுமா?

போஸ்டர்களிலேயே இப்படி தவறு என்றால் படத்தில் என்ன செய்திருப்பார்கள் என குழப்பத்தில் ரசிகர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top