காணாமல் போன ஐந்தாம் வகுப்பு மாணவி பள்ளி மைதானத்தில் கருகிய நிலையில் உயிரிழப்பு!

நேற்றைய தினம் காணாமல் போன 9 வயது மாணவி கருகிய நிலையில் மீட்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோரின் மனதை பதைக்க வைத்த உள்ளது. கொடைக்கானல் ஒன்றியத்திலுள்ள பாச்சலூரில் பள்ளிக்கூட மைதானத்தில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளார்.

பாச்சலூரில் டீக்கடை உரிமையாளர் சத்யராஜின் ஒன்பது வயது மகள் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை 11 மணியளவில் வகுப்பறையை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மாணவி காணாமல் போனதால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலரும் பதறி இருந்தனர்.

காணாமல் போன மாணவி பள்ளிக்கூட மைதானத்தில் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட 9 வயது மாணவியை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறியதால் மருத்துவமனையில் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவி உயிரிழப்பு குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை புரிகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment