Connect with us

மிஸ்கின் உடன் இணையும் சிவகார்த்திகேயன்.. எந்த படத்தில் தெரியுமா?

Sivakarthikeyan pic

Entertainment

மிஸ்கின் உடன் இணையும் சிவகார்த்திகேயன்.. எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அறிமுகமானார். மிமிக்ரி செய்வதில் மிகவும் கைதேர்ந்தவரான இவர் ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,தளபதி விஜய்,தல அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களில் பேசி பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.

sivakarthikeyan 1

அப்போது மிமிக்ரி செய்து கிடைக்கும் பணத்தினை வைத்து தான் கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார். அந்தளவிற்கு கஷ்டப்பட்டு கடின உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. முக்கியமாக குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தை ரசிகர்களை அதிகம் வைத்துள்ளார்.இவரை பல இளைஞர்கள் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.

sivakarthikeyan 3

இவரது நடிப்பில் அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் டான்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சமுத்திரகனி, பாலசரவணன் விஜய் என பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் இடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

mishkin

தற்போது சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மடோன் அஸ்வின் உள்ளிட்ட இயக்குனர்களின் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இவர் நடிக்க உள்ள இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஸ்கின் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி மட்டும் உறுதியானால் இப்படம் மாபெரும் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த மாற்றமே இல்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top