மிசாவில் சிறைக்கு செல்லவில்லை – குண்டைத் தூக்கிப் போட்ட அண்ணாமலை!!

கடந்த சில நாட்களாகவே பாஜக – திமுக இடையே மோதல்கள் என்பது விஸ்வரூபத்தை எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் கோவை பீளமேடு காவல்துறையினர் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது சிறையில் அடைத்தனர்.

இத்தகைய சம்பவமானது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காரைக்குடி பொதுக்குழு கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன் படி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மிசாவில் சிறைக்கு செல்லவில்லை என்றும் மிசா வழக்கில் சிறைக்கு சென்ற மாதிரி பொய் சொல்லுவதாக தெரிவித்து உள்ளார்.

அதேபோல் பாஜக தொண்டர்களை கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்றும் சிறைக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் கிடையாது என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment