Connect with us

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு: எப்.ஐ.ஆர் பதிவு!

Tamil Nadu

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு: எப்.ஐ.ஆர் பதிவு!

228a6eaa601cba1e8d9ad0a0577997fd

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்து எப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் கடந்த 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் வேட்புமனு தாக்கலின்போது குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பிற்கும் தற்போதைய சொத்துமதிப்பிற்கும் 55 சதவீதம் வித்தியாசம் இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் எம்ஆர் விஜயபாஸ்கர் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் வங்கி கணக்கை முடக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top