உங்கள் வீட்டில் பணம் பன்மடங்கு பெருக இதோ எளிய வழி…!

மகாலெட்சுமிக்குப் பிடித்த பொருள்களில் கண்ணாடியும் ஒன்று. அஷ்டமங்கலப்பொருள்களில் ஒன்று தான் இந்தக் கண்ணாடி. வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடி வைத்தால் பணம் பெருகும். நிறைய கோவில்களில் கண்ணாடி அறை என்றே ஒரு தனி அறை இருக்கும்.

அதே நேரத்துல அங்கு இருக்கும் தெய்வத்துக்கு சிறப்பு பூஜைகள் எல்லாம் நடைபெறும். பல கோவில்களில் மூலவர் சன்னதிக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்து இருப்பார்கள். மூலவரின் திருவுருவம் அந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கும்.

இந்தக் கண்ணாடி வைப்பதற்கு நிறைய வாஸ்துக்கள் உள்ளன. எந்தெந்த அறைகளில் கண்ணாடி இருக்கணும்? எந்தத் திசையை நோக்கி வைக்கணும்னு குறிப்புகள் இருக்கு.

Kannadi3
Kannadi3

பலரும் வீட்டுக்குள் வருபவர்கள் பார்க்கும் விதத்தில் தலைவாசலில் கண்ணாடி வைத்து இருப்பார்கள். இங்கு வைக்க முடியாதவர்கள் அந்த இடத்தில் ஒரு விநாயகர் படத்தை வைத்தாலே போதும். இது திருஷ்டியைப் போக்குவதற்காக வைக்கப்படுகிறது.

பூஜை அறையில் கட்டாயமாக இருக்க வேண்டிய பொருள் கண்ணாடி. குலதெய்வத்தின் அருளை வாரி வழங்குவது இதுதான். குலதெய்வமே தெரியாதவர்களும் இந்தக் கண்ணாடியைப் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

அதைத் தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளும் கிடைக்கும். பாசிட்டிவ்வான அதிர்வலைகளை உண்டுபண்ணும். சுவாமி படங்கள் வைக்க வேண்டிய இடத்தில் இந்தக் கண்ணாடியை வைக்கலாம். பூஜை அறையில் வைக்க வேண்டிய கண்ணாடியை மேற்கு நோக்கி வைத்தால் பாசிட்டிவ் வைபரேஷன் அதிகரிக்கும்.

பொதுவாக பூஜை அறையில் வைக்கும் சுவாமி படங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி இருக்கும். கண்ணாடியை மட்டும் மேற்கு நோக்கி வைக்க வேண்டும். அதாவது பூஜை அறையில் உள்ள சுவாமி படங்கள் கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

Kannadi

அந்தக் கண்ணாடியில் உங்களோட முகத்தைப் பார்க்க கூடாது. அதே போல் அறையில் கண்ணாடியை மேற்கு அல்லது தெற்கு நோக்கி மாட்டலாம். நீங்கள் மாட்ட வேண்டிய சுவர் கிழக்கு அல்லது வடக்காக இருக்கலாம்.

பாத்ரூமில் கண்ணாடி வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்கலாம். படுக்கை அறையிலும் கண்ணாடி வைக்கலாம். நம்முடைய உருவம் கண்ணாடியில் தெரியக்கூடாது. அப்படி தெரிந்தால் நிறைய நோய்களும், கணவன் மனைவிக்கிடையே நிறைய கருத்து வேறுபாடுகளும் இருக்கும். நாம் தூங்கும் போது கண்ணாடியில் ஸ்கிரீன் போட்டுக்கலாம்.

பசங்க படிக்கும் அறையில் கண்ணாடி இருக்கக்கூடாது. எதிரெதிரே கண்ணாடியை வைக்கக்கூடாது. கேஷ் பாக்ஸ் அல்லது நகைப்பெட்டியில் கண்ணாடியை மாட்டலாம். சின்ன கண்ணாடியை ஒட்டி வைத்தாலே போதும். ஆனால் அது சதுர வடிவில் தான் இருக்க வேண்டும். வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடியை மாட்டுவதாக இருந்தாலும் அது சதுர வடிவில் தான் இருக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews