இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அதிசய நிகழ்வு… இப்படியும் ஒரு அதிசயம் நடக்குமா? ஆச்சரியத்தில் மக்கள்…..

இதுவரை உலகில் பல அரிதான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இப்படி எல்லாம் கூட நடக்குமா என நாம் நினைக்கும் அளவிற்கு பல அரிதான நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆனால் தற்போது நடந்துள்ள சம்பவத்தை சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். அப்படி என்ன சம்பவம் என்று தானே நினைக்கிறீர்கள்.

இரட்டை சகோதரி

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர் அவரது மனைவி அம்பிகா என்ற தம்பதிகளுக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டியபோது மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் சகோதரிகள் இருவரும் ஒரே சமயத்தில் கரு தரித்துள்ளனர்.

பின்னர் கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தை பெற்று கொள்ள விரும்பி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை அடுத்து அன்று இரவே ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டு உள்ளது.

பிரசவத்திற்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகோதரிகள் இருவருக்கும் அடுத்தடுத்து அழகான பெண் குழந்தைகள் பிறந்தது. இதைவிட ஒரு பெரிய அதிசயம் என்ன தெரியுமா? பிறந்த குழந்தைகள் இருவருக்குமே ஒரே வகை பிளட் குரூப் என்பதுதான். அதன்படி இரண்டு குழந்தைகளுக்கும் ஓ பாசிட்டிவ் இரத்த வகையாம்.

இரட்டை சகோதரிகள் இருவரும் ஒரே நாளில் திருமணம் செய்து, ஒரே நாளில் குழந்தை பெற்றெடுத்ததோடு அந்த குழந்தைகளுக்கு ஒரே ரத்த வகை இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment