அதிசயம் ஆனால் உண்மை: ரசிகர்களுக்கு செய்தி அனுப்பிய அஜித்!

தல அஜித் ஒரு தனிமை விரும்பி என்பதும் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று மட்டும் இருப்பார் என்பதும் ரசிகர் மன்றம் குறித்து அவர் கண்டுகொள்வதில்லை என்றும் குறிப்பாக ரசிகர் மன்றத்தை அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே கலைத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ரசிகர்கள் மீது அவருக்கு தனிப்பட்ட வகையில் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜீத் திரையுலகிற்கு அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது ரசிகர்களுக்கு தனது சார்பாக செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த செய்திகள் அஜித் கூறியிருப்பதாவது:

ரசிகர்கள், வெறுப்பவர்கள் & நடுநிலைகள் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள். 

ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.

 வாழ & வாழ விடு!
 நிபந்தனையற்ற அன்பு எப்போதும் !!

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.