புதினா – கொத்தமல்லி வைத்து சட்னி வேண்டாம்! புதுசா இந்த தோசை ரெசிபி பண்ணலாம்!

நாம் புதினா – கொத்தமல்லி வீட்டுல அதிகமா இருந்தா நம்ம சட்னி தான் செய்வோம் , இந்த முறை புதுசா இந்த தோசை ரெசிபி பண்ணலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி ,தோசை மாவு – 2 கப்

பச்சை மிளகாய் – 3

புண்டு – 2 பல்

புதினா, கொத்தமல்லி – ஒரு கப்

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்புன்

நெய் – தேவையான அளவு

ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..

செய்முறை

முதலில் இந்த தோசை செய்ய புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், புண்டு ஆகியவற்றை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து, அந்த விழுதுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து அந்த கலவையை தோசைக் கல்லில் நெய் தேய்த்து, தோசைகளாக சுட்டெடுக்கவும். சுவையான புதினா கொத்தமல்லி தோசை ரெடி.

கறிக்குழம்புடன் போட்டி போடும் மணமணக்கும் ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா!

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவினால் தோசை மேலும் சுவையாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews