மாணவர்களிடம் காணொலி காட்சி மூலம் நலம் விசாரித்த அமைச்சர்கள்; கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என்று கூறிய அமைச்சர்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 20ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிய இருவரும் நேரில் சென்று சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி மாணவர்களிடம் காணொளி மூலம் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர் மாணவர்களிடம் காணொளி காட்சி மூலம் அமைச்சர் பொன்முடி மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் நலம் விசாரித்தனர். எம்.ஐ.டி மாணவ-மாணவிகளில் இதுவரை 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் சுனாமி வேகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் பரவி வருகிறது என்றும் கூறினார். அரசின் உத்தரவை மீறி கல்லூரிகள் செயல்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு இன்று ஐயாயிரத்தை தாண்டும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment