ஆந்திராவில் 90% அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பதவி: ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி |

ஆந்திர அமைச்சரவையில் 90% அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களை சேர்க்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு  செய்துள்ளார். இதில் நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தலைநகர் அமராவதியில் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற போது 2.5 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர்களை மாற்றி புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்ய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனவே தற்போது உள்ள அமைச்சர்களின் 90 சதவீதம் அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் தற்போது மொத்தம் 26 மாவட்டங்கள் இருப்பதாக கூறிய அவர், பதவி இழக்கும் அமைச்சர்களுக்கு மாவட்ட அளவில் உறுதியாக பதவி வழங்கப்படும் என கூறினார்.

அதே நேரத்தில் பதவி இழந்தவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சீட் கொடுக்கப்படும் என்றும் வெற்றி பெற்றால் அமைச்சர்களாக பதவி வழங்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment