நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏப்ரல் 14ம் தேதி ஆளுநர் அளித்த தேநீர் விருந்து புறக்கணிப்பு பற்றி விளக்கம் அளித்தார். ஆளுநருடன் எந்த ஒரு முரண்பாடும் இல்லை என்றும் அவருடன் உறவு மிகவும் சுமுகமாக தான் உள்ளது என்றும் கூறியிருந்தார்.
ஆளுநரின் அணுகுமுறை தான் சரியானதாக இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை; ஏனென்றால் ஆளுநர் பங்கேற்கிறார் என்ற ஒரே காரணத்தினால் திமுகவினர் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை புறக்கணித்து கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ரவி பங்கேற்க பட்டமளிப்பு விழாவை திமுக அமைச்சர்கள் 2 பேர் புறக்கணித்துள்ளனர். அழைப்பிதழில் பெயர் இருந்தும் திமுகவின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விழாவில் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே ஆளுநரின் தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவை தமிழக அரசு புறக்கணித்து இருந்தது என்பதால் தொடர்ந்து இவ்வாறு செய்வது சர்ச்சையாக காணப்படுகிறது.