அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு: வருமான வரித்துறை பரபரப்பு விளக்கம்!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை செலுத்துவதற்காக அவரது நிலம் மற்றும் 3 வங்கிக் கணக்குகளை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் வருமான வரித்துறையினர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரியை செலுத்தும் படி, பல உத்தரவுகள் பிறப்பித்தும் கூட வரி செலுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு: உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!!

இதன் காரணமாக சொத்துக்களை முடக்கியதாகவும், முடக்கப்பட்ட வங்கி கணக்கில் அரசு சார்பில் 8 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி இருப்பதாகவும் அந்த பணத்தினை சொந்த செலவுகளுக்காக எடுத்து இருப்பதாக வரிமான வரித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் வருமான வரித்துறையினருக்கு சரியான வரியை செலுத்தவில்லை என்றும் சொத்துக்களை பொறுத்த வரையில் வேறு யாருக்கும் விற்று விட கூடாது என்பதற்காக முடக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!!

வருமான வரித்துறையினரின் விளக்கத்தை கேட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணை டிசம்பவர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.