அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு: சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ரூ.206 கோடி வரி பாக்கியை வசூலிக்க அவரது 117 ஏக்கர் நிலம் மற்றும் 3 வங்கி கணக்குகளை முடக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை நாளை விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் வரி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட வருமானவரித்துறைக்கு ரூ.206.42 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதன் காரணமாக 17 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குககளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

இந்த சூழலில் வழக்கு குறித்து நாளை விளக்கம் அளிக்க வருமானவரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.