மாணவியின் மரணத்தை அரசியலாக்கும் முயற்சி.!! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் வேலு கண்டனம்;

பெரும் உட்கட்சி பூசல் எதிர்க்கட்சியான அதிமுகவில் நிகழ்ந்து கொண்டு வருகிறது. ஏனென்றால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஒருபுறம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒருபுறம் என கட்சி இரண்டாக பிளந்துள்ளது.

இந்த நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜக கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் ஜெகதீஷ் தங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கருத்து கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி உட்கட்சி மோதலை திசை திருப்ப மாணவியின் மரணத்தை அரசியல் ஆக்குகிறார் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

மாணவியின் பெற்றோரை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்த ஆறுதல் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு ஸ்தம்பித்து நின்றது என்பதை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.

கலவரத்தில் ஈடுபட்டவர், தூண்டிவிடப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரப்படும் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment