இனி ஆளுநர் விஷயத்தில் இப்படித்தான்… அதிரடி முடிவெடுத்த திமுக!

இனி வரும் காலங்களில் ஆளுநரின் நடவடிக்கையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கனவை சிதைக்கும் விதமாகவும், சட்டமன்ற மாண்பை குலைக்கும் வகையிலும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் விலக்கு பெற்று 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலே மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயக மரபுகளை போற்றும் வகையில் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நீட் விலக்கு சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லி சென்ற போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீட் விலக்கு மசோதா மட்டுமல்லாமல் பல சட்டங்கள் ஆளுநரிடம் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு,

இந்த சட்டமசோதாக்களை உடனடியாக குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது தொடர்பாகவும், குறிப்பிட்ட காலவரையறை குறித்தும் ஆளுநர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, சட்டப்பேரவை மாண்பை கேள்விக்குறியாக்கி இருக்கும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாகவே அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்

இனி வரும் காலங்களில் ஆளுநரின் நடவடிக்கையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment