எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி!!

சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்னாள் அமைச்சர் வேலுமணி 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு, பொய்யான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லையென தெரிவித்தார்.

கோர விபத்து! குழந்தை உட்பட 5 பேர் பலி..!!

தொடர்ந்து பேசிய அவர் ஒளிவு மறைவற்ற முறையில் டெண்டர் விடப்பட்டது ஆகவும், டெண்டர் ஒதுக்கிய குழுவில் அவர் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் என்ற முறையில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலமாக அரசு நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியதாக தனது வாதங்களை முன்வைத்தார். அதேபோல் வழக்குப் பதிவு செய்வது நீதிமன்றம் மட்டுமே முடிவு எடுக்கும் என்றும் இதில் மாநில அரசு தலையிட கூடாது என கூறினார்.

சிலிண்டர் வெடிப்பு! 5 நாட்களுக்கு முன்பே மத்திய உளவுத்துறை எச்சரிக்கை!

அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள் இந்த வழக்கை பொறுத்த வரையில் முறையான விசாரணை நடத்தாமல் இருந்ததாகவும், இந்த வழக்கை ரத்து செய்தாலும் கூட குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், விசாரணை அமர்வானது நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment