அதிர்ச்சி! லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்… பெரம்பலூரில் பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டில் அமைச்சர் சிவசங்கர் லிப்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிருக்கு சுய உதவி குழுக்கள் மூலம் கடன் தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழக போக்குவரத்துறை அமைச்சர் இன்று வருகை தந்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று லிப்ட் பழுதாகி இருக்கிறது. கிட்டத்தட்ட சுமார் 15 நிமிடம் லிப்டில் சிக்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து தகவறிந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் லிப்ட் பழுது பார்க்கும் நபர்களை வரவழைத்து சரிசெய்தனர். பின்னர் அமைச்சர் சிவசங்கர் பத்திரமாக வெளியே வந்தார். இந்த சம்பவத்தினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருதும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.