
செய்திகள்
#Breaking பட்டியல் ரெடி… பஸ் கட்டணம் உயருகிறது… அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தொலைதூரப் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆந்திரா, கேரளா மாநிலத்திற்கு செல்லும் அரசு பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்துவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொலைதூரம் பயணிக்க கூடிய பேருந்துகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப அதிகாரிகள் கட்டண பட்டியலை தயாரித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து இதுவரை முதல்வர் ஒப்புதல் அளிக்காததால் அதனை அமல்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், போக்குவரத்து கழகம் ஏற்கனவே 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
