Connect with us

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு… அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

Annamalai Senthil Balaji

Tamil Nadu

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு… அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

அண்ணாமலைக்கு 24 மணி நேரம் கெடு… அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் எனர்ஜி என்ற தகுதியே இல்லாத நிறுவனத்திற்கு ரூபாய் 4,400 கோடி காண்ட்ராக்ட்டை கொடுத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியிருந்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் கடந்த 2019-இல் அதிமுக ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. இபிஎஸ், தங்கமணியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை அண்ணாமலை தற்போது முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அண்ணாமலை 24 மணி நேரத்தில் நிரூபிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top