அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட, அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2011-2015-ம் வரையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் 2 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒரு வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆடையின்றி வீடியோ கால்.. மடாதிபதி தற்கொலையில் திடீர் திருப்பம்!!

இந்த மனுக்கள் மீதான விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் ஏழ்மையான மக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததால் வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உஷார்! 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 2 வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். மேலும், ஒரு வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment