அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: பாஜக நிர்வாகி பதில் மனு தாக்கல்!!

டாஸ்மாக் விற்பனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரம் உள்ளதாக பாஜக நிர்வாகி சென்னை உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மக்களே கவனம்! 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!!

இந்நிலையில் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதை தடுக்க வேண்டும் என மனுதாக்கல் ஒன்றை தொடுத்திருந்தார். இதற்கு பாஜக நிர்வாகி நிர்மல் குமார் அவதூறு பரப்ப கூடாது என தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த சூழலில் பாஜக நிர்வாகி நிர்மல் குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அமைச்சர் மீது குற்றம் சாட்டுவதற்கு தன்னிடம் போதுமான ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார்.

திமுகவில் பரபரப்பு!! விபத்தில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

அதே போல் முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையில் அமைச்சருக்கு விதிக்கப்பட்ட தடை என்பது கருத்து சுகந்தரத்திற்கு எதிரானது எனவும் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.