மதுரை வரும் பக்தர்களுக்கு வைஃபை வசதியுடன் நவீன தங்கும் விடுதி… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 35 கோடி ரூபாய் செலவில் நவீன தங்கும் விடுதி கட்டித்தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நவீன தங்கும் விடுதி கட்ட அரசு முன் வருமா என சட்டமன்ற உறுப்பினர் தளபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டு, 1.33 ஏக்கர் பரப்பளவில் 57 அறைகளில் 307 படுக்கை வசதிகளுடன் 35 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும், இந்தாண்டே தங்கும் விடுதி கட்டித் தரப்படும் என கூறிய அவர், 307 படுக்கை வசதிகளுடன், wifi வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தங்கும் விடுதி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் 2 கோடி 41 செலவில் அளவில் 54அறை கொண்டு 136 படுக்கை வசதிகள் கொண்ட நவீன தங்கும் விடுதி அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment