இன்னும் 2 ஆண்டுகள் தான்; கோயம்பேடு வியாபாரிகளுக்கு அமைச்சர் சொன்ன நல்ல செய்தி!

இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு சந்தைகள் போல் மக்கள் பயன்படுத்த சிறப்பான முறையில் கோயம்பேடு சந்தை மாற்றி அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாகத்திலுள்ள கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தின் காய்கறி மார்க்கெட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், CMDA தலைவருமான பி.கே. சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோயம்பேடு வணிக வளாகத்தில் ஏற்கனவே கடந்த மாதம் 8 ஆம் தேதி மலர் அங்காடிகள் ஆய்வு செய்து வியாபாரிகள் குறைகள் கேட்றியப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று 7 ஏக்கர் பரப்பளவில் 1985 கடைகளை கொண்ட காய்கறி சந்தையை ஆய்வு செய்தோம். பல இடங்களில் குப்பைகள் காலை 10 முதல் 11 மணி அளவில் தான் அகற்றப்படுவதால் அதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஏற்கனவே திருவிழா நாட்களில் இரண்டு முறை குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டது என்றனர், இனி தினமும் இரு முறை குப்பைகளை அகற்றம் செய்யவேண்டும் என்றும், திருவிழா நாட்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் நாட்களில் கூடுதலாக ஆட்களை வேலைக்கு வைத்து குப்பைகளை அகற்ற வாகனங்களையும் ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

மார்கெட் சார்ந்த சர்வீஸ் ரோடு பகுதிகள், 20 தெருக்கள் வரை அசுத்தமாக உள்ளன. அதனை சரி செய்ய சொல்லி உள்ளோம். திட்டு திட்டாக குப்பைகள் இருப்பதாக வழி சீராக இல்லை அதனையும் முறையாக சுத்தம் செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.ஒரு வாரத்திற்குள் கழிவறைகள் பிரச்சினைகளும் சரி செய்யப்படும். அரசு மட்டுமின்றி வியாபாரிகளும் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தால் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அப்புறப்படுத்தப்படும்.

3941 கடைகள் உள்ள பகுதியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் மேல் மக்கள் வரும் சந்தையை ஒழுங்குபடுத்தி வெளிநாட்டு மார்கெட் போல் மேம்படுத்த துறை உறுதி செயல்பட்டு வருகிறோம். முதற்கட்டமாக மலர் அங்காடி தொடர்ந்து இன்று காய்கறி சந்தை அடுத்து அடுத்து பழங்கள், உணவு தானியங்கள், பேருந்து நிறுத்தம் பகுதியையும் ஆய்வு செய்ய உள்ளோம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்படும், படிப்படியாக அனைத்தும் மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.