உதயநிதி வருங்காலத்தில் முதலமைச்சர் ஆவாரா? சூசகமாக சொன்ன அமைச்சர் பொன்முடி!

உதயநிதி வருங்காலத்தில் மிகப் பெரிய பொறுப்புகளை வகிப்பார் என முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக சூசகமாக அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி நாளை கவர்னர் மாளிகையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசியபோது ’இளைஞர் அணி செயலாளராக திறமையுடன் இருக்கும் உதயநிதி அமைச்சரான பிறகு இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் வருங்காலத்தில் அவர் மிகப் பெரிய பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுவார் என்றும் முதல்-அமைச்சராக இருப்பதாக சூசகமாக தெரிவித்தார்.

பொன்முடிஉதய நிதி அமைச்சராக வேண்டாமென்று திமுகவில் யாரும் சொன்னது கிடையாது என்றும் ஏன் தாமதமாக அமைச்சர் பதவியை கொடுத்தீர்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

வாரிசு அரசியல் என்பது புதிதல்ல என்றும் முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்கு வந்த போதும் இந்த குற்றச்சாட்டு இருந்தது என்றும் மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் மக்களுக்கு எல்லாமே தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 200 எம்எல்ஏக்கள் இருந்தால் அதில் 10 அல்லது 20 பேர்கள் மட்டுமே வாரிசு அரசியல்வாதிகளாக இருப்பார்கள் என்றும் இது திமுகவில் மட்டுமின்றி எல்லா கட்சிகளிலும் இருப்பதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்பு உடையது என்றும் உதயநிதி அமைச்சரானால் அவருடன் அனைத்து அமைச்சர்களும் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.