அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்; சோகத்தில் மூழ்கிய உறவுகள்!

பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவரும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியுமான மருத்துவர் கே. தியாகராஜன் உடல் நலக்குறைவால் காலமானார்.

விழுப்புரத்தில் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவரும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் உடன் பிறந்த தம்பியுமான கே தியாகராஜன்(65) உயிரிழந்தார். மருத்துவர் தியாகராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவர் தியாகராஜன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் இன்று சென்னையில் இருந்து விழுப்புரம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறந்த தியாகராஜன் சென்னை ராஜீவ் காந்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக பிரிவு சிறப்பு மருத்துவர் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

மருத்துவர் தியாகராஜரின் உடலுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறந்த மருத்துவர் தியாகராஜனுக்கு டாக்டர் பத்மினி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.