News
மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்த அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்
சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழி பழமையான மொழி என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு ஈஷா பசுமை கரங்கள், பசுமை கலாம், மாஃபா அறக்கட்டளை சார்பில் கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மற்றும் நடிகர் விவேக் சேர்ந்து துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், “12 ஆம் வகுப்பு பாடதிட்டத்தில் தமிழ்மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையான மொழி என்று இடம்பெற்றுள்ள தகவல் தவறானது. தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே கூறியுள்ளார்.

திருவள்ளூர் அருகே அதிரம்பாக்கத்தில் 3 லட்சம் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்து இருகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற சான்றுகள் உள்ள நிலையில் தமிழ் வெறும் 2300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என கூறமுடியாது.
12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழை இழிவுப்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு கிடையாது. மேலும் சிலை கடத்தல் வழக்கில் எந்த அமைச்சருக்கும் தொடர்பில்லை என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக், தமிழத்தில் ஏற்பட்ட வறட்சி மக்களுக்கு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
