ஜிஎஸ்டி மீது பழிபோட்டு தமிழகம் அதிக வரி வசூலிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய தினத்தில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி மத்திய அரசு கூடுதலாக வரி விதிப்பது ஆகவும், கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்த நிலையில் எங்கிருந்து கருப்பு பணம் வந்தது என நிதி அமைச்சருக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல் ரூ.5 , டீசல் ரூ.4 குறைக்கப்படும் என தெரிவித்தப்போதும் இன்னும் குறைக்கவில்லை என காட்டமாக பதில் அளித்தார்.
குறிப்பாக தயிர், பால் போன்ற பொருட்களுக்கு மத்திய அரசு குறைந்த வரி விதித்தப்போதிலும் திமுக அரசு கூடுதலாக ஜிஎஸ்டி வரி விதிப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவரது காட்டமான பதில் ஏற்காத காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து பாதியிலேயே மக்களவையை விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.