Connect with us

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை-சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

ramajayam

Tamil Nadu

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை-சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை-சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

நம் தமிழகத்தில் திராவிடர் முன்னேற்றக்  கழக ஆட்சி நடைபெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆட்சியில் கே.என்.நேரு அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் பல வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் சிபிசிஐடி, கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு எஸ்ஐடி விசாரிக்கும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

அதன்படி அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் விசாரித்த சிபிஐ, கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட குழுவில் அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐ சேர்ந்த ரவி இடம்பெற்றுள்ளனர்.

சிபிசிஐடி சிபிஐ என 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு தொடர வேண்டும் என்று நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.

ராமஜெயம் 2012ஆம் ஆண்டு திருச்சியில் நடைபயிற்சியின் போது கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை கண்காணிப்பார் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top