இரவில் அம்பத்தூர் பால் பண்ணைக்குள் நுழைந்த அமைச்சர் நாசர்; ஊழியர்களுடன் சேர்ந்து செய்த மாஸ் காரியம்!

பால்வளத் துறை அமைச்சர் நாசர் மாண்டஸ் புயலின் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு ஆய்வு மேற்கொண்ட ஆவின் பால் தங்கு தடை இன்றி பொது மக்களுக்கு சென்று சேர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததை அடுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் அனைத்து பால் பண்ணைகளையும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆவின் பால் தங்கு தடை இன்றி பொது மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் ஆவின் பால் உற்பத்தி பால்பண்ணைகள் உள்ளிட்ட நிலையங்களை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து பால் உற்பத்தியை தங்கு தடை இன்றி உற்பத்தி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் அனைத்து மக்களிடமும் எவ்வித தடையும் கொண்டு சேர்க்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசித்தார்.

இரவு முழுவதும் அம்பத்தூர் பால் இருந்து கண்காணித்து மேற்பார்வை செய்து அனைத்து நடவடிக்கைகளையும் உடனிருந்து செயல்படுத்திய அமைச்சர், உரிய நேரத்தில் பால் பக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தி மாண்டஸ் புயல் தாக்கத்தின் விளைவாக எங்கும் பால் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

புயல் நேரத்திலும் பால் பண்ணையில் தங்கியிருந்து ஊழியர்களுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொண்டதோடு, உரிய நேரத்தில் பால் பக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.