Connect with us

இன்னும் 10 வருஷம் எந்த விவசாயியும் பேங்க் வாசலில் நிற்க வேண்டாம் … வேளாண் துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதி!

mrk panneer slevam

Tamil Nadu

இன்னும் 10 வருஷம் எந்த விவசாயியும் பேங்க் வாசலில் நிற்க வேண்டாம் … வேளாண் துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதி!

இன்னும் 10 வருஷம் எந்த விவசாயியும் பேங்க் வாசலில் நிற்க வேண்டாம் … வேளாண் துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதி!

அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உருவாக்கும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுக தற்போது பத்து மாதக் குழந்தை. இந்த 10 மாத குழந்தை. இரண்டு பட்ஜெட்டுகளை முடிந்துள்ளது. இது வளரும்போது பத்து ஆண்டுகாலத்திற்கு பார்க்கும்போது விவசாயிகள் எந்த வங்கிகளிலும் சென்று கடன் கேட்டு நிற்கமாட்டார்கள். அதுதான் இந்த பட்ஜெட்டினுடைய நோக்கம்.

இந்த பட்ஜெட்டினால் விவசாயிகள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கிகளில், சொசைட்டிகளில் சென்று கடன் கொடுங்கள் என்று கேட்கக்கூடிய வாய்ப்பில்லாமல் தன்னிறைவு பெற்ற விவசாயியாக மாறக்கூடிய திட்டங்களை இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். இப்போதுதான் விதை விதைத்திருக்கிறார்கள். இப்போதுதான அது முளைத்து வருகிறது. அது ஆலமரம் போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்தத் திட்டங்கள் செல்லும்போது பொருளாதார முன்னேற்றம்.

உதாரணத்திற்குச் சொல்லப்போனால் 50 மரக் கன்றுகள் கொடுக்கிறோம். ஒரு குடும்பத்திற்கு தென்னங்கன்று கொடுக்கிறோம். அந்த 50 மரக் கன்றுகள் வளர்ந்து தேக்கு, மகாகனி ஆகிய விலை உயர்ந்த மரங்களாக வளரும்போது, பத்து வருடங்களுக்குப் பிறகு ஒரு தேக்கு மரம் ரூ.50,000-லிருந்து ரூ.1,00,000 வரை உயரக்கூடிய வாய்ப்பு. இந்த 50 மரங்களும் உருவாகும்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பங்களிலும் ரூ.25,00,000/-க்கு மதிப்புள்ள மரங்களால் அவர்களின் பொருளாதார முன்னேற்றம். அதுபோல் பெண்களை ஊக்குவிப்பதற்காக மாதா மாதம் ரூ.1,000/- வரப்போகிறது.

10 ஆண்டுகளுக்கு கூடுதலாக 11 இலட்சம் ஹெக்டேர் பயிரிடச்செய்தல், 11 இலட்சம் ஹெக்டேர் கூடுதலாக பயிர்செய்தல். இந்த ஆண்டு குறுவை பயிரில் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கூடுதலாக குறுவை தொகுப்புத் திட்டத்தில் 61 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கிட்டத்தட்ட 46 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு விளைச்சல் அதிகமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 1½ இலட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த 10 மாத காலத்தில், விவசாயத்தில் 1½ இலட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

தொலைநோக்குத் திட்டம் 2. 10 இலட்சம் ஹெக்டேராக உள்ள சாகுபடி நிலங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 20 இலட்சம் ஹெக்டேராக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், உணவு தானியங்களான தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான வேளாண் உற்பத்தியில் முதல் 3 இடங்களுக்குள் தமிழகம், தேசிய அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த 3 திட்டங்களையும் கண்டிப்பாக, 2 ஆண்டு காலத்தில் நாங்கள் திமுக அரசு எட்டிவிடும் என்றும், இதன் 10 ஆண்டு காலம் முழுமை அடையும்போது, விவசாயத்தில் வேளாண் துறையில் இது ஒரு புரட்சியாக உருவாக்கப்படும் என்பதற்கு உறுதி அளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top