Connect with us

காவிரி கரையோர மக்களுக்கு அடுக்குமாடி வீடு அமைச்சர் மதிவேந்தன் அதிரடி….

குடிசை மாற்று வாரிய வீடு

செய்திகள்

காவிரி கரையோர மக்களுக்கு அடுக்குமாடி வீடு அமைச்சர் மதிவேந்தன் அதிரடி….

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான 386 குடும்பங்களை சேர்ந்த 1052 பேர் முகாம்களில் தங்க வைப்பு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி தரப்படும் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் குமாரபாளையத்தில் தெரிவித்துள்ளார்…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரபாகர் ஆகியோர் பார்வையிட்டு முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

முகாமில் போதுமான மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை செய்யபட்டு உள்ளது குறித்து வருவாய் துறையினர் கேட்டறிந்தார்.  இதன் பின்னர் முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரம் வெள்ள பாதிப்புக்கு உள்ளான 386 குடும்பங்களை சேர்ந்த 1052 பேர் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும், முகாம்களில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு வீடுகள் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளதாகவும்,

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் விரைவில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.  குடிசை மாற்று வாரிய வீடுகளில் தங்க வைப்பதன் மூலம் வெள்ள பாதிப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். இதற்காக கணக்கெடுப்பு பணிகளை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்…

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top