திமுகவில் பரபரப்பு!! விபத்தில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ மனையில் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார்.

அப்போது முதல் மாடியில் இருந்து 3-வது மாடிக்கு செல்வதற்காக லிப்டில் சென்றுகொண்டிருந்த போது 2-ம் தளத்தில் லிப்ட் பழுதாகி சரிசெய்ய முடியாத சூழலில் உருவாகியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அமைச்சரை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். தற்போது அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினால் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.