Connect with us

தற்கொலை மருந்துகளை தனி நபர்களுக்கு விற்க கூடாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

தற்கொலை மருந்து

தமிழகம்

தற்கொலை மருந்துகளை தனி நபர்களுக்கு விற்க கூடாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

திருவாரூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: நவம்பர் 15ஆம் தேதிக்குள் புதிதாக 4038 பணியிடங்கள் நிரப்பப்படும்.

எங்கெல்லாம் காலி பணியிடங்கள் இருக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதுவரை புதிதாக நிரப்பப்பட்ட 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்கள். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இருக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணி பாதிப்பு என்பது எங்கும் இல்லை

தற்கொலைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு ஆதாரமான பொருட்களை மருந்து கடைகளில் வெளியில் தரும்படி வைக்க கூடாது, தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் தரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

இன்று காலை வரை இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 380 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3740 பயனாளிகள் பயன் பெற்றிருக்கிறார்கள் என்றார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top