இன்று இரவு முதல் யாரும் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் எச்சரிக்கை

இன்று இரவு முதல் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக இன்று இரவு முதல் நாளை மறுநாள் காலை வரை சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் இன்று இரவு முதல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் உள்ளவர்கள் ஆதார் அட்டை, குடும்ப ரேஷன் அட்டை மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் மழை நீரில் நனைய விட்டு விட வேண்டாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் தேங்கி இருக்கும் மழை நீர் அவ்வப்போது வெளியேற்றுவதற்காக 400 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment