News
கோடநாடு விவகாரம் குறித்த தகவல்கள் அனைத்தும் கற்பனை: அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை எஸ்டேட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்த சயன் என்பவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது, ‘கோடநாடு விவகாரத்தில் அரசின் நல்லபெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த உள்நோக்கோடு சதி அரங்கேறியிருக்கிறது. கோடநாடு விவகாரம் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் கற்பனையே என்று கூறியுள்ளார்.
மேலும் கோடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன? வேண்டுமென்றே வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
