பள்ளி வாகனங்களின் நிலை என்ன? வாகனத்திற்கு உள்ளே சென்று ஆய்வு செய்யும் அமைச்சர்!
கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவர் உயிர் இழந்தார். இதனால் வாகன ஓட்டுநர் மற்றும் பெண் ஊழியர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வாகன ஓட்டுநர் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக உள்ளதா என்பதினை அதிகாரிகள் தினம்தோறும் ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அளவுக்கு மீறி வாகனங்களில் மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நம் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருவதாக காணப்படுகிறது.
அதன்படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் வாகனங்களை ஆய்வு செய்து வருகிறார். பள்ளி வாகனங்களின் நிலை மற்றும் வாகனங்களின் தரம் ஆகியவற்றை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
