Connect with us

‘இன்னும் பத்தே நாள்’… நகைக்கடன் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. கேள்விக்கு ஐ.பெரியசாமி அதிரடி பதில்!

202112300845472906 Tamilnadu cooperative society gold loan announcement SECVPF

News

‘இன்னும் பத்தே நாள்’… நகைக்கடன் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. கேள்விக்கு ஐ.பெரியசாமி அதிரடி பதில்!

‘இன்னும் பத்தே நாள்’… நகைக்கடன் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. கேள்விக்கு ஐ.பெரியசாமி அதிரடி பதில்!

நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது, அன்றைய தினம் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேம் தியாகராஜன் 2022 -2023ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, 19-ம் தேதி வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கேள்வி பதில் மீதான விவாதம் தொடங்கியது
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் பல்வேறு இடங்களில் தள்ளுபடி செய்யப்படவில்லை என சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதற்கு

இன்னும் 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நகைகள் திரும்ப வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top