கல்வி எந்த பட்டியலில் இருக்கு?… அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அதிரடி விளக்கம்!

கல்வி பொதுப்பட்டியலிலும் இல்லாமல் மாநில பட்டியலிலும் இல்லாமல் தற்போது ரகசிய பட்டியலில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு திட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறினார். மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சர்கள்
மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வட மாநிலத்தவர்கள் போலிச்சன்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். கல்வி பொதுப்பட்டியலிலும் இல்லாமல் மாநில பட்டியலிலும் இல்லாமல் தற்போது ரகசிய பட்டியலில் உள்ளது என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment