கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இயல்பான வெப்பநிலையில் இருந்து தினமும் இரண்டு முதல் நான்கு டிகிரி வரை வெப்பம் அதிகரித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வெயிலின் தாக்கம் மே மாதம் மிகவும் அதிகரிக்கும் என்றும் ஜூன் இரண்டாவது வாரம் வரை அதிகபட்ச வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

deepavali school holiday 16660824773x2 1இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அன்பு மகேஷ் இது குறித்து விளக்கம் அளித்தார். வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்து கொள்வோம் என்றும் இப்போது அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ’எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகளை தொடங்கி உள்ளோம் என்றும் வருங்காலத்தில் அதிகப்படியான மாணவர்கள் ஜே.ஈ.ஈ பயிற்சி வகுப்பில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற அனைத்து சட்ட போராட்டங்களையும் நடத்துவோம் என்று அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.